கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் படகுகள் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

Update: 2023-09-29 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

கடல் சீற்றம்

வங்கக்கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமாக உள்ளது.

குறிப்பாக தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றமாக உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் படகுகள்

இந்த தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நேற்று நிறுத்தப்பட்டன. படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்