காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கயத்தாறு அருகே காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-18 11:48 GMT

கயத்தாறு:

கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், நெல்லை தாழையூத்து பண்டாரகுளம் வடக்கு தெருவை சேர்ந்த இலங்காமணி (வயது 49) என்பதும், கயத்தாறு அருகே வில்லிசேரி மற்றும் பக்கத்து கிராமங்களில் வீடு வீடாக ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக காரில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. காரில் 40 கிலோ வீதம் 15 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து தூத்துக்குடி உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக இலங்காமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்