500 ஆண்டு பழமையான மரம் விழுந்தது

500 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது

Update: 2023-06-14 18:49 GMT

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யாபட்டி ஊராட்சியில் உள்ளது பதினெட்டாம்படி கருப்பர் கோவில். இந்த கோவில் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து பேசுவதற்கும் தரிசனம் முடிந்து இளைப்பாறவும் இந்த மரம் நிழல் கொடுத்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இரவு நேரத்தில் விழுந்ததால் எந்த அசம்பாவிதமும் இன்றி தடுக்கப்பட்டது.நிழல் தரும் மரம் சாய்ந்ததை பக்தர்கள் வருத்தத்துடன் பார்த்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்