கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 52 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 3 மாதங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 52 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-04-07 19:41 GMT

கடந்த 3 மாதங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 52 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா விற்பனை

தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஜனவரி மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை கடந்த 3 மாத காலத்தில் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 761 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 52 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 3 மாதங்களில் 265 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை -31, விருதுநகர்--26, திண்டுக்கல்- -30, தேனி-41, ராமநாதபுரம்- 23, சிவகங்கை- -10, நெல்லை -24, தென்காசி - 20, தூத்துக்குடி -25, குமரி மாவட்டம்-24 மற்றும் நெல்லை மாநகரம்- 11 பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 2450 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வழக்குகளில் ஈடுபட்ட 494 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிணைய பத்திரம்

தற்போது தென்மண்டலத்தில் 302 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கஞ்சா மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுகளை காவல்துறையினர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். வரும் காலங்களிலும் கஞ்சாவிற்கு எதிராக காவல்துறையினரின் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்