தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் செத்தன

பஞ்சப்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் செத்தன.;

Update:2023-03-22 00:15 IST

பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராஜ் (வயது46). விவசாயி. இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலை வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார். நள்ளிரவு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு திம்மராஜ் வெளியே வந்து பார்த்தார். அப்போது தெரு நாய்கள் ஆடுகளை கடித்து குதறி கொண்டு இருந்தன. இதையடுத்து அவர் தெருநாய்களை விரட்டினர். இதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. மேலும் சில ஆடுகள் காயம் அடைந்தன. இதுகுறித்து திம்மராஜ் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தெருநாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் செத்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்