அரசின் 4 திட்டங்கள் மூலம் மக்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் மிச்சம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;
உங்களை பார்க்கும்போது எனக்கு புது எனர்ஜி கிடைக்கிறது. திமுகவுக்கு முதல் எம்.பி. கொடுத்த ஊர் திருவண்ணாமல. ஆண்டின் நிறைவில் நிறைவான திட்டங்களை கொடுத்துள்ளோம். 4 ஆண்டுகளில் நாடே போற்றும் வகையில் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளோம். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குழந்தைகள், பெண்களை மேடை ஏறி, அவர்களை பெருமைப்படுத்தி மகிழ்கிறோம். தமிழக அரசின் 4 திட்டங்கள் மூலம் மக்களுக்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது. நாடு போற்றக்கூடிய திட்டங்களை தந்தது திமுக அரசு. 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. 900 கோடி முறை மகளிர் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். 19.4 லட்சம் குழந்தைகளுக்கு தினமும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்;
* ஏந்தல் கிராமத்தில் ரூ.1 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்
* கலசப்பாக்கம் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
* செங்கம் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
* ரூ.1 கோடியிலுயர் தொழில்நுட்ப ஒட்டு ரக பயிர்களின் நாற்றங்கால் அமைக்கப்படும்
* வேளான் சார்ந்த வேளைகளை பெற மலையூரில் ரூ.3 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்
* அந்தியேந்தலில் விதைகளை விவசாயிகளுக்கு வழக்க ரூ.2.40 லட்சத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்.
தமிழ்நாடு உயர வேண்டும் என உழைக்கிறோம். ஆனால் தமிழகத்திற்கான நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. நிதி இல்லாமல் நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஆட்சி அமைத்து வருகிறோம். இந்த வளச்சிதான் பலரின் கண்களை உணர்த்துகிறது. தமிழ்நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். பொறுப்புள்ள மத்திய மந்திரி அத்தனை வெறுப்பு உணர்ச்சியை பரப்புகிறார். சவால்களை முறியடித்து முன்னேறியுள்ளோம்.
தலைநகரைக்கூட நிர்வகிக்க முடியாமல் பாஜக அரசு திணறி வருகிறது. டெல்லி காற்று மாசு, ரூபாய் வீழ்ச்சி உள்ளிட்டபல பிரச்சினைகளை மத்திய அரசால் சரிசெய்ய முடியவில்லை. 100 நாள் வேலை திட்டத்துக்கு பாஜக அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. இதனை கேட்க எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையப்போவது உறுதி. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.”
இவ்வாறு அவர் பேசினார்.