பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது;

Update:2023-08-15 00:45 IST

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடிய சவுந்தர்ராஜன் (வயது 43), ஜெயப்பிரகாஷ்(42), லட்சுமணன்(41), மணிகண்டன்(28), ராஜா(29), நாகராஜ்(40), மகேஷ் குமார்(38) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரத்து 700 மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்