பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
மயிலாடுதுறையில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்;
மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டியன் (வயது 47), கீழப்பெரும்பள்ளம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (36), கூழையார் சுனாமி நகரைச் சேர்ந்த கண்ணன் (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல தீப்பாய்ந்தாள் அம்மன்கோவில் பழைய காவேரி பாலத்தின் அருகே பணம் வைத்து சூதாடிய சோழம்பேட்டையை சேர்ந்த பாலமுருகன்(40), திருச்சம்பள்ளியை சேர்ந்த பரசுராமன் (41), அரையபுரத்தை சேர்ந்த மூர்த்தி (42), மூவலூரை சேர்ந்த பாவாடைராயன் (41) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.