70 ஆயிரம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்

கோவைக்கு கொண்டு வரப்பட்ட 70 ஆயிரம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்படுகிறது;

Update:2023-03-07 00:15 IST


18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத் தால் புதிதாக வாக்காளர் அடையாள அட்ைட வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9- ந் தேதி முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை பலர் விண்ணப்பம் செய்தனர். அந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

இதில் தகுதி உடைய வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அவர்களுக்கு அடையாள அட்டை அச்சிடப்பட்டது.

அதில் முதல் கட்டமாக 70 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது. அந்த வாக்காளர் அட்டைகளை சம்மந்தப்பட்ட வாக்கா ளர்களுக்கு அனுப்புவதற்காக கோவை குட்செட் ரோட்டில் உள்ள தபால் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வாக்கா ளர் அடையாள அட்டைகள் விரைவில் தபால் மூலம் வாக்கா ளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்