கோவை மத்திய சிறை முன் 9-ந்தேதி போராட்டம்

25 ஆண்டுகளுக்கு மேலான முஸ்லிம் கைதிகளை விடுவிக்க கோரி கோவை மத்திய சிறை முன் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்;

Update:2023-06-25 00:45 IST

25 ஆண்டுகளுக்கு மேலான முஸ்லிம் கைதிகளை விடுவிக்க கோரி கோவை மத்திய சிறை முன் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை சிறை முன் போராட்டம்

ஆயுள் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை யில் அடைபட்டு கிடக்கும் முஸ்லிம் கைதிகளை தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 9-ந் தேதி கோவை மத்திய சிறை முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முஸ்லிம் கைதிகளை விடுவிக்க முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

கோவையில் சர்தார் படுகொலையில் கைதான ஹரி, கண்ணன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதுபோன்ற பலர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

பொது மன்னிப்பு

காந்தி படுகொலையில் கோட்சே சகோதரர் கோபால் கோட்சே விற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

கோவை, மதுரையில் முதல்-அமைச்சர் தேர்தல் பிரசாரத்தின ்போது கைதிகள் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில் 37 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

மத்திய பாரதீய ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருப்பதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அப்துல்சமது எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் உமர், மாவட்ட தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்