திருக்கோவிலூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்

திருக்கோவிலூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என 1038-ம் ஆண்டு சதய விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2023-10-26 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-ம் ஆண்டு சதயவிழா திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு தமிழ்ச் சங்க தலைவர் சிங்கார உதியன் தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில், கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்சங்க செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார். பேராசிரியர் ரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார்.

அறங்காவலர் குழு தலைவர் ஜெயசங்கர், கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவனுக்கு அருண்மொழிவர்மன் விருதையும், தேவ ஆசைத்தம்பி, சுகந்தி, புலவர் தங்க விசுவநாதன், சாய் ரமேஷ்பாபு, நல்ல பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருமுறைச் செம்மல் விருதையும் வழங்கினார். தொடர்ந்து சதய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை போட்டி, கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், கவிஞர்கள் ஜனசக்தி ஞானவேல், ராமகிருஷ்ணன், சிதம்பரநாதன், மிரேஷ்குமார், தேவி, லாவண்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் திருக்கோவிலூரில் கி.பி.947-ம் ஆண்டு ஐப்பசி சதயத்தில் பிறந்து தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு திருக்கோவிலூரில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்ச் சங்க பொருளாளர் குருராசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்