சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-18 01:40 IST

மணிகண்டம்:

திண்டுக்கல் பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த பாலுசாமியின் மகன் கார்த்தி(வயது 21). இவருக்கும், திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை கார்த்தி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும் கார்த்தி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்