குறுவட்ட அளவிலான கபடி போட்டி

தரகம்பட்டி அருகே குறுவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.;

Update:2023-08-25 00:11 IST

கபடி போட்டி

தரகம்பட்டி அருகே உள்ள மத்தகிரி ஊராட்சி செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிருஷ்ணராயபுரம் குறுவட்ட அளவில் 14 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் கல்பனா தலைமை தாங்கினார்.

போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் தங்கராசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சான்றிதழ்கள்

இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் உள்பட குறுவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்வழங்கப்பட்டது.

போட்டிகளை காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகர் ஒருங்கிணைப்பு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்