கார் மோதி மாடு செத்தது

கார் மோதி மாடு செத்தது,;

Update:2022-09-25 03:06 IST

தா.பேட்டை:

கரூர் கணபதிநகர் பகுதியை சேர்ந்த சங்குபாண்டியன் (வயது 62), சுப்பிரமணி (66) ஆகியோர் ஜாதகம் பார்ப்பதற்காக தா.பேட்டை அருகே எரகுடி பகுதிக்கு காரில் வந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த ராஜா(59) ஓட்டினார். பின்னர் ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் முசிறி வழியாக கரூருக்கு காரில் 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். தா.பேட்டையை அடுத்த நாமுட்டி பள்ளம் அருகே சாலையை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது கார் மோதியது. இதில் மாடு செத்தது. மேலும் காரில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை தா.பேட்டை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்