பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய்

கீரமங்கலத்தில் பூனைக்குட்டிக்கு நாய் பாலூட்டியது.

Update: 2023-01-22 18:25 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவர் தனது வீட்டில் கால்நடைகள், நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார். பொதுவாக நாயும், பூனையும் சண்டையிட்டு கொள்வது வழக்கம். ஆனால் துரைப்பாண்டியன் வீட்டில் வளரும் நாயும், 5 மாத பூனைக்குட்டியும் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒன்றாகவே விளையாடி வந்தன. தற்போது 4 குட்டிகளை ஈன்றுள்ள நாய் தனது குட்டிகளுடன், பூனைக்குட்டிக்கும் பால் கொடுத்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்