வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமானது.;

Update:2023-07-01 04:00 IST


கோத்தகிரி


கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் விநாயகர் கோவில் அருகே தனியார் மர மில் உள்ளது. இங்கு மரம், வீட்டு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மர மில்லையொட்டி, அங்கு பணியாற்றி வரும் சேகர் என்பவரது வீடு உள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து புகை வந்தது. பின்னர் வீட்டில் தீ பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. உடனே மில் தொழிலாளர்கள் கோத்தகிரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ அருகில் உள்ள மர மில்லுக்கு பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டதுடன், பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து மின்கசிவு மூலம் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்