படவேடு கோட்டைமலை கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

படவேடு கோட்டைமலை கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2023-09-30 23:29 IST

கண்ணமங்கலம்

படவேடு கோட்டைமலை கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

படவேடு ஜவ்வாதுமலை தொடரில் உள்ள கோட்டைமலையில் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. சனிக்கிழமை மட்டுமேஇந்த கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும்.

இங்கு புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் 2 ஆயிரத்து 164 அடி உயர மலை ஏறி வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபாலசுவாமி படவேடு பகுதியில் திருவீதி உலா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்