அரசு பள்ளி ஆசிரியரின் தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் ஓவியம்

அரசு பள்ளி ஆசிரியரின் தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் ஓவியம்

Update: 2022-11-12 18:30 GMT

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). பண்ணவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்து பாராட்டு பரிசு பெற்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த சோழபுரம் சித்ரகலா நிலையம் சார்பில் நடத்தப்பட்ட 5-வது தேசிய அளவிலான ஓவிய போட்டியில் இவரது ஓவியமும் இடம்பெற்றது. அதில் 100 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் 12 தரவரிசை பட்டியலில் இவரது ஓவியம் 7-ம் இடத்தை பெற்றது. இந்த ஓவியம் தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த ஓவியமும் இடம்பெற்றது. ஓவிய போட்டியில் 7-ம் இடத்தை பெற்ற ஆசிரியர் கணேசனுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் விருதும் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் கணேசனுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், செங்கமடை கிராம பொதுமக்கள், திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டினர். இதுகுறித்து ஆசிரியர் கணேசன் கூறியதாவது, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியங்களை வரைந்து வருகிறேன். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவத்தில் 100 அறிஞர்களின் படத்தை வரைந்ததற்கு அப்துல்கலாம் அவர்களே என்னை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தேசிய கண்காட்சிகளில் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இடம்பெற்ற நான் வரைந்த ஓவியங்களுக்காக பாராட்டு பரிசு பெற்றுள்ளேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்