பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு;

Update:2023-09-14 01:11 IST


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, நத்தம் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். சரந்தாங்கி பாலத்தில் வந்தபோது, பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி அரசு அளித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்