மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
சுல்தான்பேட்டை அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
சுல்தான்பேட்டை
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் சந்தியாகு (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.