புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-11-13 01:08 IST

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள பட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக சேரன்மாதேவி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவாளன் தலைமையில் போலீசார் நேற்று கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கண்ணனை கைது செய்து, புகையிலை ெபாருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்