ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்

யானை தந்தங்கள் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2025-12-08 08:52 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய கீழக்கரை மரைன் போலீசார் , இலங்கைக்கு கடத்த முயன்ற 4 கிலோ யானை தந்தங்களை இன்று பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு ரூ. 1 ஆகும். இந்த யானை தந்தங்கள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்