திருமணமாகாத ஏக்கத்தில் தையல் தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத ஏக்கத்தில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-08 09:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). தையல் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்