தக்கலை அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு

தக்கலை அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் ,இறந்தார்.

Update: 2023-03-12 20:38 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு ஆலடிகுண்டு பகுதியை சேர்ந்தவர் ஆசிப். இவரது மகன் சதாம் உசேன் (வயது32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் சதாம் உசேன் நேற்று இரவு 7.30 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள 80 அடி ஆழ பஞ்சாயத்து பொதுக்கிணற்றின் அருகே சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கூறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணறுக்குள் இறங்கி உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்