மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு;
கோவை
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் துரைராஜபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மகன் முத்து செல்வம்(வயது 27). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு கல்லூரி அருகே சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் உராய்ந்தபடி மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.