குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்

பாணாவரம் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-07-06 23:48 IST

தண்டவாளத்தில் பிணம்

பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ெரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களோடு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்பாடி ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் இறந்த நபர் பாணாவரம் கிராமத்தை சேர்ந்த வண்டு என்ற ராஜேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலையா?

ராஜேஷ் ெரயில் மோதி இறந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காட்பாடி ெரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று ராஜேஷ் குற்ற வழக்கு தொடர்பாக சோளிங்கர் கோர்ட்டில் ஆஜராக இருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்