துணை ஜனாதிபதி வருகை: ராமேஸ்வரத்தில் டிரோன்கள் பறக்க தடை

காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.;

Update:2025-12-29 10:46 IST

ராமநாதபுரம்,

காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்