ஆனைமலை அருகே கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

ஆனைமலை அருகே கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது;

Update:2022-10-26 00:15 IST

ஆனைமலை

ஆனைமலை அடுத்த திவான் சாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 34). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகன் தீனதயாளன் (22). தாமரைச்செல்வன் திவான் சாபுதூர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது தீனதயாளன் மோட்டார் சைக்கிளில் வந்து தாமரைச்செல்வனிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைநத் தீனதயாளன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவுதம் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்