நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது லாரி மோதல்- 12 பேர் படுகாயம்

வெறையூர் அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-07-13 13:38 GMT

வாணாபுரம்

வெறையூர் அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது லாரி மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிதம்பரம் பகுதியில் இருந்து வேலூரை நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சே.வட்டம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் ஏழுமலை (வயது 37) ஓட்டி வந்தார்.

வெறையூர் அருகே வந்தபோது பயணிகள் இயற்கை உபாதைக்கு செல்வதற்காக பஸ்சை நிறுத்த டிரைவரிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து வெறையூர் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரமாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

அப்போது கடலூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி, நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் கடுமையாக சேதம் அடைந்ததோடு அதில் இருந்த பயணிகளான சீர்காழியைச் சேர்ந்த புகழேந்தி (50), அவரது மகன் யோகி (22) சீர்காழியை சேர்ந்தபழைய பாளையம் வீரசேகர் (45) சித்தூரை சேர்ந்த வாசுகி (45). சிதம்பரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (38). நெய்வேலியை சேர்ந்த கலாநிதி மாறன் (17) மயிலாடுதுறையைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண் (35) சிதம்பரத்தைச் சேர்ந்த அக்பர் அலி (28) மற்றும் லாரி டிரைவர் குகநாதன் (42) உள்ளிட்ட 12 பேர் படுகாயம்அடைந்தனர்.

அவர்களை வெறையூர் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்