மதுரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்

மதுரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Update: 2022-11-26 19:08 GMT


மதுரை யாகப்பாநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், விதவை சான்றிதழ் வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். பல நாட்கள் ஆகியும் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தன்னார்வலரின் உதவியுடன், கிராம நிர்வாக அதிகாரியிடம் விதவை சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது அவர் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அதன்படி, அந்த பெண்ணும் லஞ்சம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க. மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், வக்கீல்கள் மாரிசக்கரவர்த்தி, முத்துக்குமார் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் தாசில்தாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்