கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்ததால் கணவர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்

கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்ததால் கணவர் வீட்டு முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

Update: 2023-07-31 14:19 GMT

திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணுக்கும், என்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது 35) என்பவருக்கும் இடையே கடந்த 2020-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணமான ஓராண்டிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனோகரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அப்பெண் கணவர் வீட்டு முன்பு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் சென்றார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்ததையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்