கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
பரப்பாடியில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
இட்டமொழி:
பரப்பாடி அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்துரை மனைவி சண்முகக்கனி (வயது 47). இவருக்கு 3 மகள்கள் உண்டு. சண்முகக்கனி கணவரை விட்டு பிரிந்து, அப்பகுதியில் உள்ள தனது தந்தை சமுத்திரம் வீட்டில் மகள்களுடன் வசித்து வருகிறார்.
2-வது மகள் பேச்சியம்மாள் (21), லேப் டெக்னீசியன் படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் பேச்சியம்மாள் பிணமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், வடக்கு விஜயநாராயணம் போலீசார் விரைந்து சென்று, பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேச்சியம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று ேபாலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.