கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி

தடுப்புச்சுவரில் ஸ்கூட்டி மோதிய விபத்தில், கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.;

Update:2022-08-01 21:35 IST

சுல்தான்பேட்டை, 

சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார் பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது மகள் சபிதா (வயது 18). இந்தநிலையில் நேற்று காலை சுல்தான்பேட்டையில் உள்ள தேங்காய் களத்திற்கு தமிழ்செல்வி வேலைக்கு செல்வதற்காக, தனது மகளுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் பின்புறம் அமர்ந்து இருந்தார். பச்சார் பாளையம் சிவன் கோவில் வளைவில் சென்ற போது, ஸ்கூட்டி திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள ஊராட்சி பொதுக் கிணற்றின் தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சபிதா கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தமிழ்ச்செல்வி சாலையோரம் விழுந்து காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, சபிதா கிணற்று நீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி சபிதாவை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்