காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்

காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானார்.;

Update:2023-04-03 00:41 IST

அறந்தாங்கி களப்பக்காடு தெருவை சேர்ந்த முருகன் மகள் ஆர்த்தி (வயது 24). இவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ராக்கத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பரணிதரன் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த 28-ந் தேதி ஆர்த்தி தனது குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது குழந்தையை தந்தை வீட்டில் விட்டுவிட்டு கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் திடீரென மாயமானார். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்