மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

தஞ்சை அருகே பஸ்சின் பின்புறம் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.;

Update:2022-05-24 01:46 IST

தஞ்சாவூர், மே.24-

தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 22). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார்சைக்கிளில் தஞ்சை- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பஸ் டிரைவர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்