நெல்லை: ஆட்டோ மீது மோதிய அரசு பஸ்; 4 பெண்கள் படுகாயம்

கடலூர் திட்டக்குடி அருகே நேற்று அரசு பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள்.;

Update:2025-12-25 12:03 IST

நெல்லை மாவட்டம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அரசு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதில், அரசு பஸ்சின் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. கடலூர் திட்டக்குடி அருகே நேற்று அரசு பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 2 கார்களில் பயணித்த 9 பேர் பலியானார்கள். இந்நிலையில், நெல்லையில் அரசு பஸ் பிரேக் பிடிக்காமல் இன்று விபத்து ஏற்பட்டு 4 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்