அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் தேரோட்டம்
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3-வது நாளன்று அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடைபெற்றது. 5-வது நாள் விழாவன்று மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி 36 அடி உயரமுள்ள பெரிய தேரில் ஆட்சீஸ்வரர் இளங்கிளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மேகவண்ணன் உள்பட கிராமமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.