மீன்பிடி அனுமதி சீட்டு பெறாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை
மீன்பிடி அனுமதி சீட்டு பெறாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்..;
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் மீன் பிடிக்க செல்ல தொடங்கியுள்ளன. இதனிடையே தடைக்காலம் முடிந்து மீன்பிடி அனுமதிச்சீட்டு பெறாமல் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் மீது மானிய டீசல் வழங்குவதை நிறுத்தி வைக்கவும், மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதி சீட்டை நிறுத்தி வைக்கப்படும் என்றும் மீன் துறை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.