மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில்மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-05-03 00:30 IST

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படுகிறதா என சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின்பேரிலும், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி அறிவுரையின்படி ஆய்வு நடந்தது.

இதில் வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

147 கடைகள், நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில் தேசிய பண்டிகை விடுமுறைகள் சட்டம் 1958-ன் கீழ் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 49 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 51 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என்று மொத்தம் 104 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபாரதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஞானவேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்