ஓடையில் பாலம் அமைக்க நடவடிக்கை

தியாகதுருகம் அருகே ஓடையில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-07-18 00:15 IST

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே உடையநாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை அங்குள்ள ஓடை வழியாகத்தான் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் மழைக்காலத்தில் ஓடையில் தண்ணீர் செல்லும்போது, இறந்தவரின் உடலை ஓடை வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஓடையில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் புதூர் கிராமத்தில் உள்ள ஓடையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், திட்டக்குழு தலைவருமான புவனேஸ்வரி பெருமாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஓடையை பொதுமக்கள் எளிதாக கடக்கும் வகையில், அங்கு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து கண்டாச்சிமங்கலம் ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பது தொடர்பாகவும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் கே.கே. அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, ஒன்றிய துணை செயலாளர் கணேசன், ஒன்றிய அவைத் தலைவர் சாமிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி கேசவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்