என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ஜி.கே.மணி

அன்புமணியின் சூழ்ச்சியால் ராமதாஸ் நிலைகுலைந்து போயுள்ளார் என்று ஜி.கே.மணி கூறினார்.;

Update:2025-12-28 13:53 IST

சென்னை,

சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாளை ( டிச.29) நடைபெறும் பாமக செயற்குழு கூட்டத்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்; 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். பாமகவை அபகரிக்கும் அன்புமணியின் சூழ்ச்சியால் நிலைகுலைந்து போயுள்ளார் ராமதாஸ்.

கட்சியை அன்புமணி சீரழித்துவிட்டதாக என்னிடம் பலரும் கூறுகின்றனர். என்னை பாமகவில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ராமதாசால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர் அன்புமணி. எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் எப்படி என்னை கட்சியில் இருந்து நீக்க முடியும்?.

அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்; பாமகவுக்கு அன்புமணி வர வேண்டுமென அனைவரும் விரும்பினோம்; சூழ்ச்சியால் பிரிந்து சென்றனர். அன்புமணியின் தூண்டுதலால், சிலர் ராமதாஸின் மனம் புண்படும்படியாகப் பேசினர்.

தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார். இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் பின்னே வலிமையான கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்