நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை:தவறான தகவலை பரப்ப வேண்டாம்: மேலாளர் விளக்கம்
பிரபல நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை:தவறான தகவலை பரப்ப வேண்டாம் அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். விக்ரம் நலமுடன் உள்ளார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.