அடவிநயினார் அணை நிரம்பியது
கடையநல்லூர் அருகே மேக்கரையில் உள்ள அடவிநயினார் அணை நிரம்பியது.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதியில் அனுமன் நதிக்கு குறுக்கே 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நேற்று முழு கொள்ளளவான 132 அடியை எட்டி வழியத் தொடங்கியது.
இந்த அணைக்கு 30 கன அடி தண்ணீர் வந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு பண்பொழி, இலத்தூர், ஆய்க்குடி, கம்புளி, சாம்பவர்வடகரை, சுரண்டை பகுதி குளங்களுக்கு செல்லும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு மேக்கரை அணைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் அணைக்கு வரும் நீர்வழி கால்வாயில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.