அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

மயிலத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சி.வி.சண்முகம் எம்.பி.கலந்து கொண்டு பேசினார்.;

Update:2023-01-02 00:15 IST

மயிலம், 

அ.தி.மு.க.ஆலோசனை கூட்டம் மயிலத்தில் நடைபெற்றது. இதற்கு மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.டி.சேகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபணி, அர்ச்சுணன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பது, கட்சியில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். இதேபோல் மயிலம் ஒன்றியத்தில் தென்குளப்பாக்கம், தழுதாளி, கண்ணியம், குணமங்கலம் வெளியனூர், கள்ளக்குளத்தூர் ஆகிய கிராமங்களிலும் அ.தி.மு.க.ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய, பாசறை மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்