எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் வரவேற்பு

எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் வரவேற்பு அளித்தனர்.;

Update:2022-10-30 00:15 IST

அணைக்கட்டு

எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தார். பிற்பகல் 2 மணிக்கு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு உள்ளிட்டோர் பூக்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். ஒரு சில நிமிடங்கள் பேசிய பழனிசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியின் போது நூற்றுக்கு மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் சுங்கச்சாவடியில் குவிந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்