அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

கீழ்கொடுங்காலூரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.;

Update:2023-06-04 18:20 IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கீழ்க்கொடுங்காலூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி ராமச்சந்திரன் வரவேற்றார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கையை தொடக்கி வைத்து பேசினர். தொடர்ந்து ஆண்களும், பெண்களும் கட்சியில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்