அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-29 18:45 GMT

கடலூர்:

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. இதில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இவைகளுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தாமோதரன், மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.இதில் மாவட்ட துணை செயலாளர் தெய்வ.பக்கிரி, கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், கந்தன், நகர செயலாளர் காசிநாதன், மாவட்ட மருத்துவர் அணி கிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாசிலாமணி, மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.அழகானந்தம், தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்