நிலக்கடலையில் நோய் தாக்குதலை தடுப்பது குறித்து ஆலோசனை

நிலக்கடலையில் நோய் தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.

Update: 2023-04-07 18:16 GMT

தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக நிலக்கடலையில் நோய் தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வேளாண் அறிவியில் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி திரவியம் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, சாகுபடியின்போது வேர் அழுகல் நோய் நிலக்கடலையில் பரவி காய்ந்து விடுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதனை தடுக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இதில், தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்செல்வி, திருமுருகன், தமிழ்செல்வன், தோகைமலை வட்டார உதவி வேளாண் அலுவலர் முனீஸ்வரன், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்