காவல்துறை சார்பில்ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் :கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்

காவல்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டது.

Update: 2023-08-27 18:45 GMT


விழுப்புரம் உட்கோட்டம் காணை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட காவல்துறை சார்பில் காணையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 28 கிராம ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் ேபசுகையில், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும், தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு கேமரா பொருத்தினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, குற்றத்தடுப்பு நடவடிக்கை போன்றவை நடைபெறாமல் தடுக்கப்படும். மேலும் கிராமத்தில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் தனக்கு தகவல் தெரிவிக்குமாறும் எல்லா பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும் என்றும், இதுதொடர்பாக கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

முடிவில் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்