3 மாதங்களுக்குப் பின் கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது- பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது. இதனால் பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-06-22 19:30 GMT

கோவை

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது. இதனால் பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

55 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தது. தினசரி பாதிப்பு 1, 2 என்று இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி தொற்று 30, 40-ஐ கடந்தது. இந்த நிலையில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 மாதங்களுக்கு பின்பு கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுஇடங்களில் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

31 பேர் வீடு திரும்பினர்

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நேற்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,617 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 247 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்